யாழ் தென்மராட்சி வரணி வட்டாரத்திற்கான தமிழரசுக் கட்சியின் முலக்கிளைக்குழுத் தெரிவு நிகழ்வு பிரதேசசபை உறுப்பினர் சி. பிரபாகரன் தலைமையில் வரணி அலுவலகத்தில் நேற்றய தினம் (15) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் வரணி பிரதேசத்தின் அபிவிருத்தி, வரணியின் வளர்ச்சி, மக்களின் தேவைகள், மற்றும் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களை கொண்ட கிளைக்குழுவுக்கான நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றிருந்தது.
அந்தவகையில் வரணிக் கிளைக்குழுவின் தலைவராக சி. பிரபாகரன் அவர்களும் செயலாளராக இ. நிறஞ்சன் அவர்களும் பொருளாளராக
ந. நிரோஜி அவர்களும் உப தலைவராக அ . ரசிக்குமார் அவர்களும் உப செயலாளராக ஜீ. லோகிதா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் உறுப்பினர்களாக சி. செந்தூரதன், செ . முகுந்தன், த . தனபவன்,
நி .பிரபாகர் பொ . ஜெயசுதன், மு. சுப்பிரமணியம், பொ. பரமேஸ்வரன்,
சி. பஞ்சலிங்கம், சு. கணபதிப்பிள்ளை, க. கமலேந்திரன், க. கனகரத்தினம்,
வி. விக்னேஸ்வரன், ரூ. நிரோசினி, சி. கமலாதேவி, ய. விஜயராணி ஆகியோரும் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment