தென்மராட்சி வரணி ரட்ணா முன்பள்ளியின் மழலைகளுக்கான விளையாட்டு விழா நிகழ்வுகள் நேற்று முன்தினம்(1) பிற்பகல் 2.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன.
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி. பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம் அவர்களும், நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலய அதிபர் திருமதி க. கபரியேற்பிள்ளை அவர்களும், தென்மராட்சி முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி ற. தர்மிலா அவர்களும், மற்றும் கெளரவ விருந்தினர்களாக வரணி இயற்றாலை கிராம அலுவலர் செல்வி இ. சங்கீதா அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச. தீபராசா அவர்களும், வரணி பொது சுகாதார பரிசோதகர் நிஜன் அவர்களும், காணி அன்பளிப்பாளர் சி. தங்கராசா அவர்களும் மற்றும் வரணியின் ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
இந்நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்களாக தடைதாண்டுதல், மீன் பிடித்தல், பாம்பு ஓட்டம், கயிறு இழுத்தல் போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் பழையமாணவர், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.
மேலும் மழலைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சி. பிரபாகரன் தனது நிதியில் சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.அத்துடன் முன்பள்ளிக்கு பெயர்ப்பலகையும் செய்து கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி. பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம் அவர்களும், நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலய அதிபர் திருமதி க. கபரியேற்பிள்ளை அவர்களும், தென்மராட்சி முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி ற. தர்மிலா அவர்களும், மற்றும் கெளரவ விருந்தினர்களாக வரணி இயற்றாலை கிராம அலுவலர் செல்வி இ. சங்கீதா அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச. தீபராசா அவர்களும், வரணி பொது சுகாதார பரிசோதகர் நிஜன் அவர்களும், காணி அன்பளிப்பாளர் சி. தங்கராசா அவர்களும் மற்றும் வரணியின் ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
இந்நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்களாக தடைதாண்டுதல், மீன் பிடித்தல், பாம்பு ஓட்டம், கயிறு இழுத்தல் போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் பழையமாணவர், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.
No comments:
Post a Comment