Thursday, October 18, 2018

வரணி மத்திய கல்லூரி வரலாற்றின் திருப்பம்!

வரணி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இன்றைய தினம் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வரணி மத்திய கல்லூரியில் 2007 சாதரண தர, 2010 உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் பள்ளி நிழல்கள் அமைப்பின் ஊடாக  பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய 12  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், மற்றும் பெற்றோரை இழந்த 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொதிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.


மேலும் கடந்த யுத்த காலத்தில் தாய், தந்தை ஆதரவை இழந்த மாணவி ஒருவருக்கு அவரது கல்வி நிலையை முன்னெடுத்து செல்வதற்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிறீன் கிராஸ் கோட்டலில் இடம்பெற்ற ஒன்று கூடலில் இம் மாணவர்களால் அங்குரார்ப்பணத்துடன் பள்ளி நிழல்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக இவர்கள் இன்றைய தினம் 250 000 ரூபாக்கும் அதிகமான தொகையினை செலவிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய  கல்லூரி முதல்வர் ப. செல்வவிநாயகம் அவர்கள் தனது உரையில் " வரணி பாடசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு செயற்பாடு இதுவே முதல் முறையாக ஒரு புனிதமான வாணி விழா  நாளில் இடம்பெற்றிருப்பது தனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் மேலும் இந்த செயற்பாடானது ஏனைய பழைய மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் தெரிவித்திருந்ததுடன் இப்பழைய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உதவிக்கரம் நீட்டிய பழைய மாணவர்கள் தெரிவிக்கையில் தாம் இது  மாதிரியான இன்னும் பல செயற்றிட்டங்களை எதிர்காலத்திலும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.





No comments: