வரணி வட்டாரத்திற்குரிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (11) காலை 9.30 மணிக்கு இடைக்குறிச்சி பொது மண்டபத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு வரணி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கெளரவ தவிசாளர் க. வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பொதுமக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலுக்கு கெளரவ உபதவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், மற்றும் கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் வரணி பிரதேசத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment