யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ள கொடிகாமம் பருத்தித்துறை வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது.
இந்த வீதி இன்று யாழில் அதிகம் பேசப்படும் ஒரு வீதியாகவும் அமைந்துள்ளது. காரணம் பல வருடங்களாக திருத்தப்படாமலும் இன்றைய தேவைக்கேற்ப அகலப்படுத்தப்படாமலும், குன்றும் குழியுமாகவும் காணப்படுகின்றது.
இவ்வீதியானது வரணி மற்றும் வடமராட்சி மக்களுக்கு மிகவும் இன்றியமையாத வீதியாக அமைந்துள்ள அதேவேளை யாழின் குறிப்பிடக்கூடிய மரக்கறிச் சந்தைகளில் ஒன்றான கொடிகாமத்திற்கு வியாபார நோக்கில் செல்வோர், தலைநகர் செல்வதற்காக கொடிகாமம் புகையிரத நிலையம் செல்வோர் அல்லது கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வந்து – வடமராட்சி மற்றும் தென்மராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் செல்வோர்,
வன்னி – வடமராட்சி – ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் போக்குவரத்து,
வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் அரச உத்தியோகங்கள் நிமித்தமான அன்றாடப் போக்குவரத்து, வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் தலைநகர் உட்பட்ட இலங்கையின் பிரதான நிலப்பரப்பின் பகுதிகளுக்கான போக்குவரத்து. போன்ற பல தேவைகளுக்கு பயன்படும் முக்கியத்துவம் வாய்ந்த வீதியாகும்.
மேலும் வரணி சிட்டிவேரம் கண்ணகை ஆலயம், வரணி மத்திய கல்லூரி, வரணி பிரதேச வைத்தியசாலை, வரணி பொதுச்சந்தை, சமுர்த்தி வங்கி மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன இவ்வீதியில் தான் அமைந்துள்ளன.
இவ்வளவு முக்கியத்துவமான பிரதான வீதியாக அமையும் கொடிகாமம் பருத்தித்துறை வீதியானது இன்னும் ஓரிரு மாதங்களில் காப்பெற் வீதியாக மாற்றம் பெறுவதற்கான வேலைகள் தொடங்கவுள்ளன . அதற்கான ஆரம்ப கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை பயணம் செய்யும், பலன் பெறும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:
Post a Comment