Friday, September 14, 2018

வரலாறு புகழும் வரணி சிட்டிவேரம் கண்ணகைக்கு சப்ததள இராஜகோபுரம்

வரலாற்று புகழ் மிக்க அருள்மிகு வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய சப்ததள இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.

ஆலய பரிபாலன சபையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது விசாக நட்சத்திரத்துடன் கூடிய கன்னி லக்கினத்தில் காலை 6.21 மணி முதல் 8.07 மணிவரையுள்ள சுப வேளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் பண்பாட்டு விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் அவர்களால் காலை 7.51 மணிக்கு அடிக்கல் சிறப்பான முறையில்  நாட்டிவைக்கப்பட்டது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன், பிரதேசசபை உறுப்பினர் சி . பிரபாகரன் மற்றும் இந்து பெளத்த கலாச்சார பேரவையின் செயலாளர் தேசமானிய எம். ரி.எஸ். இராமச்சந்திரன் ஆகியோரும் மேலும் ஆலய உபாயக்காரர்கள், பக்தர்கள் நலன்விரும்பிகள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கண்ணகை தாயின் அருட்கடாட்சம் பெற்று திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



No comments: