Tuesday, February 19, 2019

யாழ் கீரிமலை கடலில் கரையொதுங்கியுள்ள சடலம்

யாழ் கீரிமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.


இன்று (19) பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி இதனை அவதானித்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க  ஒருவரது சடலமே இவ்வாறு கரையொதுங்கிய நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் இது நீராடும் போது உயிரிழந்தவரின் சடலமா? அல்லது வேறிடத்திலிருந்து அலையால் அடித்து வரப்பட்ட சடலமா? என பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

கரையொதுங்கிய குறித்த சடலத்திற்கு அண்மையில் மது போத்தல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: