யாழ் தென்மராட்சி வரணி பிரதேசத்தில் பழுதடைந்த நிலையில் பல வீதிகள் காணப்படுகின்றன . இதில் முதற்கட்டமாக பதினொரு வீதிகள் திருத்தியமைப்பதற்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்த நிலையில் வீதிகளின் திருத்த வேலைகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இதில் வரணி - குடத்தனை வீதி, வரணி - மீசாலை வீதி, வரணி வைத்தியசாலை - இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணியம் இணைப்பு வீதி, கொடிகாமம் பருத்தித்துறை வீ தியிலிருந்து - குடமியன் பாடசாலை இணைப்பு வீதி ஆகிய நான்கு வீதிகளும் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
மேலும் வரணி குடமியன் ஆதி சிவன் கோவில் வீதி, வரணி கரம்பைக்குறிச்சி ஆழ்வார் மடம் வீதி, வரணி இயற்றாலை தும்புருவில் பிள்ளையார் கோவில் வீதி, வரணி நாவற்காடு குடலைபீறி பிள்ளையார் வீதி, வரணி தாவளை இயற்றாலை கரன் வீதி, வரணி வடக்கு பாடசாலை வீதி, வரணி மாசேரி நாவலடிப் பிள்ளையார் வீதி ஆகிய ஏழு வீதிகளும் விரைவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
ஏனைய வீதிகளும் அடுத்த கட்டங்களில் விரைவில் புனரமைப்புச் செய்யப்படும் என சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க. வாமதேவன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment