Saturday, December 15, 2018

யாழ் வரணியில் பிரதேச கலாசார விழா சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும்  பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய தென்மராட்சி பிரதேச செயலக கலாசார விழா இன்று(15) மு.ப.9.00 மணிக்கு  வரணி மத்திய கலாசார மண்டபத்தில் மறைந்த கலைஞர் வரணியூரான் எஸ்.எஸ். கணேசபிள்ளை அரங்கில் முதன் முதலாக பிரதேச கலாசாரப் பெருவிழா பிரதேச  செயலரும்  கலாசாரப் பேரவையின் தலைவருமான திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.




விழாவுக்கு முதன்மை விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரத்தினம் அவர்களும்  நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  மருதங்கேணி பிரதேச செயலர்  க.கனகேஸ்வரன் அவர்களும்   மதிப்புறு விருந்தினர்களாக  யாழ்.மாவட்டச் செயலக மாவட்ட கலாசார அலுவலர் மா.அருள்சந்திரன், மாவட்ட கலாசார அபிவிருத்தி அலுவலர் இ.கிருஷ்ணகுமார் அவர்களும் மேலும்  சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ. மயூரன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி. பிரபாகரன், ஓய்வு நிலை அதிபர் க. அருந்தவபாலன், தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் க.வினோஜிதா, தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வே.உதயகுமார்,  மற்றும் கலைஞர்கள் மாணவர்கள் அரச, அரச சார்பற்ற அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலை இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




தென்மராட்சி பிரதேச பாரம்பரிய பனம்பொருளில் ஆக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி ஊர்வலம் கொடிகாமத்திலிருந்து வாகனத்தில் ஊர்வலமாக வரணி பிரதேச கலாசார நிலையம் வரை வந்தபின் சிட்டிவேரம் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


 தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வே.உதயகுமார் அரங்கத்திறப்புரையை ஆற்றினார் மீசாலை சிவசக்தி நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும் கலாவித்தகர் செல்வி ஜீவன் கோபிகாவின் தனிநடனமும் இடம் பெற்றன.



பிரதேசத்தில் கலை உலகுக்கு நீண்ட காலம் சேவையாற்றிவரும் 8 கலைஞர்களுக்கு கலைசாகரம் விருதும்  இளந் தலைமுறைக் கலைஞர்கள் 7 பேருக்கு இளங்கலைஞர் விருதும் வழங்கப்பட்டன.


கலைச்சாகரம் விருதுகள் கவிஞர் த.நாகேஸ்வரன் ( இலக்கியம் ) சி.சபாரத்தினம் ( இலக்கியம் )திருமதி ஆ.சுந்தரவலட்லி ( இசை ) திருமதி சி.சுப்புலட்சுமி ( கிராமியக்கலை ) ஆ.கதிரன் ( நாடகம் ) வ.பத்மநாதன் (நாடகம் )கா.சிவஞானசுந்தரம் ( சமூகசேவை ) ஆ.கனகரத்தினம் ( ஓவியம் ) ஆகியோரும்
இளஞ்கலைஞர் விருதுகள் வி.சித்தார்த்தன் ( நாதஸ்வரம் ) வி.பிரதித்தன் ( நாதஸ்வரம் ) தெ.திருவேரகன் ( இசை )  இ.பிரதீபர் ( ஓவியம் ) கே.ரீ.குமாரநாதன் ( சிற்பம் ) ம.சங்கீதா ( நடனம் )  வ.ஜசிந்தன் ( இலக்கியம்) ஆகியோரும்  பொன்னாடை போர்த்தி சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. கைதடி மின்னொளி நாடக மன்றத்தினரின் அண்ணாவியார்  அ.சிவஞானத்தின் நெறியாழ்கையில் உருவான காத்தவராயன் சிந்து நடைக் கூத்தும்   இடம் பெற்றறிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

No comments: