போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருளை அடையாளங்காணும் நவீன உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போதைப்பொருளற்ற நாடு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊழல் ஒழிப்பிற்கான தேசிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதனடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டிற்குள் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

No comments:
Post a Comment