Monday, February 18, 2019

வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வரணியில்...!!

வரணி பகுதியிலுள்ள வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (18) சாவகச்சேரி பிரதேசசபையின் வரணி உபபணிமனைக்கு அருகாமையிலுள்ள பாரதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.


பிரதேசசபை தவிசாளர் க. வாமதேவன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகியிருந்தன.


இக்கலந்துரையாடலில் திருத்தி அமைக்கப்பட வேண்டிய வீதியின் நிலைமை, வீ தியின் தூரம் வீதியின் பெயர், அது எங்கே தொடங்குகிறது எங்கே முடிகிறது போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் உபதவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: