யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தென்மராட்சி தனங்கிளப்பு எல்லைப்பகுதியில் நேற்று(4) இரவு 9.00 மணியளவில் 77 கிலோ 840 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் வலய புலனாய்வுப் பிரிவினரான தினேஷ், நிரோஜன் மற்றும் ரெஜி ஆகியோருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கு அமைய குறித்த கஞ்சாவுடன் இருவரையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த இருவரும் வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கஞ்சாவை தனங்கிளப்பு பகுதிக்கு விற்பனை செய்யவே கொண்டு வந்து புலனாய்வாளர்களிடம் மாட்டியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் வெற்றிலைக்கேணி பகுதியைச் சேர்ந்த 31, 29 வயது உடைய நபர்கள் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment