Sunday, February 3, 2019

சிற்றூழியர்களின் நியமனங்கள் அந்தந்த மாவட்டங்களிற்கே! சுமந்திரன் உறுதி.

நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற கருத்துக்களால் களமாடுவோம் நிகழ்வில் கலந்து கொண்டு யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பேராசிரியர் க. கந்தசாமி அவர்கள் சிற்றூழியர் நியமனம் தொடர்பில் சுமந்திரனிடம் தொடுக்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

.சிங்கள அரசியல் வாதிகள் தேர்தலுக்காக – தங்களுடைய தேர்தல் அரசியலுக்காக இவ்வாறான செயற்பாட்டை வழங்குவது சகஜம். ஆனால், நாம் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். வாகன சாரதிகள் 16 பேரை சிங்கள இனத்தைச் சார்ந்தோரை நியமித்தார்கள். நாங்கள் அதற்கு ஆட்சேபித்தோம். பின்னர் அவர்கள் வடக்கிலிருந்து மீளப்பெறப்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகின்றபோது குறிப்பிட்டார், தேங்காய் விலை எகிறியமைக்கான காரணம் தேங்காய் பிடுங்க ஆள் இல்லை என்பதாலே! ஏனெனில் எல்லாரையும் சிற்றூழியர் நியமனம் வழங்கி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டார்கள் என்று. இந்த நியமனப் பிரச்சினை இங்கும் இருக்கின்றது.

ஆகையால், நாங்கள் அரசாங்கத்துக்கு மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம் சிற்றூழியர்களை நியமிக்கும்போது அந்தந்த மாவட்டத்திலேயே நியமிக்கவேண்டும் என்று. மொழியும் ஒரு பிரச்சினையாக உள்ளது. அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனாலும் நாங்கள் கண்ணில் எண்ணெயை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


No comments: