Monday, February 4, 2019

வரணி வைத்தியரின் கேள்விக்கு எப்பவும் எமது கதவு திறந்து தான் உள்ளது என பதில் கொடுத்த சுமந்திரன்.

சாவகச்சேரியில் நேற்று நடைபெற்ற கருத்துக்களால் களமாடும் நிகழ்வில் கலந்து கொண்டு வரணி வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் அச்சுதனால், ஒற்றுமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் பேணவேண்டும் என்ற வினாவுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வைத்தியரின் கருத்து உண்மைதான். ஆனால், நாம் எந்தக் கட்சியையும் ஏன் எந்தத் தனிநபரையும் இன்றுவரை வெளியே அனுப்பவில்லை. போனவர்கள் தாங்கள் சுயமாகத்தான் வெளியே போயுள்ளார்கள்.

சிலவேளை போனவர்கள் திரும்ப வருவார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து மீண்டும் போவார்கள். இதுவும் நடக்கின்றது. காலநேரம் வந்தால் நான் சொல்லத் தயார். நாங்கள் ஒற்றுமை இருக்கவேண்டும் என்றே சிந்திக்கின்றோம். திறந்த கதவாக இருக்கவேண்டும். பெரிய கூடாரமாக இருக்கவேண்டும். ஒரு நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம் என்பது மத்தியிலே இருக்கின்ற பிரதான கட்சிகள் இரண்டுக்கும் தெரியவேண்டும். அதுதான் எமக்குப் பலம்.

ஆகவே ஒற்றுமையைப் பேணுவதிலே நாங்கள் எந்தக் காலத்திலும் பின்னின்றமை கிடையாது. கட்சிக்குள்ளே இருப்பவர்கள் தாங்களாகப் போய் புதுக் கட்சி ஆரம்பித்தால் அதனைத் தடுக்க முடியாது. என்றார்.



No comments: