ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அவரை தாக்க முற்பட்டமை மற்றும் கமராவை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்செயல்களின் சூத்திரதாரியான இரும்பக உரிமையாளர் யாழ்ப்பாண நீதிமன்றில் வைத்து ஊடகவியலாளருக்கு 50 000 ரூபா வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள இரும்பகம் ஒன்று வாள் வெட்டுக்கும்பலால் கடந்த 2018 மார்ச் 8 ம் திகதி தாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் யாழ் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் நடராஜா குகராஜ் செய்தி சேகரிக்க சென்றிருந்த வேளை குறித்த இரும்பக உரிமையாளரும் மற்றும் சிலரும் செய்தி சேகரிப்பதை தடுத்து தாக்க முற்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இரும்பக உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அவரை தாக்க முற்பட்டமை மற்றும் கமராவை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் முதல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த நீதவான் குறித்த சந்தேகநபர்களை நிபந்தனையுடன் பிணையில் விடுவித்தார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு சுமார் 10 மாதம் தொடர் விசாரணையில் இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்றய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எதிர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தோன்றி பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்கி வழக்கினை முடிவுறுத்த விண்ணப்பம் செய்தனர். எதிர் தரப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என ஊடகவியலாளரிடம் மன்று கேள்வி எழுப்பியது.
இவ்விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வழக்கினை முடிவுறுத்த குறித்த ஊடகவியலாளர் மன்றிடம் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இழப்பீடு வழங்கும் படி எதிர் தரப்பினருக்கு மன்று உத்தரவிட்டது. இழப்பீடும் வழங்கப்பட்டது.
அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றச்செயல்களை மீளவும் செய்யக்கூடாது என்று எதிர் தரப்பினருக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ. எஸ். பி. சாமி எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment