Tuesday, December 25, 2018

வரணியிலிருந்து வன்னிக்கு எராளமான உதவிகள்

வெள்ள  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்களுக்கு (85 குடும்பங்களுக்கு) வரணி பிரதேசத்திலிருந்து பிரதேசசபை உறுப்பினர் சி. பிரபாகரன் தலைமையில் இன்றைய தினம் ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.






பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள், மற்றும் சிறுவர்களுக்கான சத்துணவுகள், மழையால் வரக்கூடிய சிறிய நோய்களான  (காய்ச்சல், மற்றும் தடிமன்) போன்றவற்றிற்கு உபயோகிக்கும் மருந்துப்பொருட்கள், நுளம்புக்கடியால் வரக்கூடிய டெங்கு போன்ற ஆபத்தான நோய்களைத்  தடுக்கும் முகமாக முகாம்களில் தங்கி இருப்போருக்கு தற்காலிகமாக உபயோகிக்கும் வகையில்  நுளம்புச்சுருள் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.






மேலும் வரணி கும்பிட்டான் புலம் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகனத்தினர் நிதி சேகரிப்பின் மூலம் ஒரு தொகுதி உணவுப்பொருட்களை நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருந்தனர்.



அத்துடன் வரணி அம்பாள் இளைஞர் கழகத்தின் நிதி சேகரிப்பின் மூலம் நேற்றய தினம் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொதிகளை வழங்கியுள்ளனர்.


மேலும் வரணி 7 ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராகி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிக்கரம் நீட்ட  உதவிய வரணி மற்றும் கொடிகாமம் வர்த்தகர்களுக்கும் மற்றும்  ஒத்துழைத்த இளைஞர்கள்  அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் எமது வலைத்தளம் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்.





No comments: