Thursday, December 20, 2018

வரணி அபிவிருத்திக்கான கலந்துரையாடல் நேற்று சிறப்பாக இடம்பெற்றது

தமிழரசுக்கட்சியின் வரணி இரண்டாம் வட்டாரத்திற்கான   கிளைக்குழுக் கலந்துரையாடல் நேற்றய தினம் (19) மலை  4.30 மணியளவில் வரணி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.



பிரதேசசபை உறுப்பினர் சி. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தென்மராட்சி கிளைக்குழு தலைவருமாகிய  கே.சயந்தன் அவர்களும், பிரதேசசபை உறுப்பினர் சி. இரத்தினசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வில் மேலும் வரணி கிராமத்தின் பொது அமைப்புக்களான கிராம அபிவிருத்திசங்கம், மாதர்சங்கம் மற்றும் சனசமூக நிலையம் போன்றவற்றின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் பொது நலன் சார்ந்தோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இக்கலந்துரையாடலில் வரணிக்  கிராமத்திற்கான தேவைகள், அபிவிருத்திகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: