Monday, October 22, 2018

கிழக்கிலும் தடம் பதிக்கிறது டான்

டான் ஊடகத்தின்  கிழக்கு பிராந்தியத்திற்கான தலைமை செயலகம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாமாங்கேசஸ்வர பிள்ளையார் வீதியில்  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டான் பணிப்பாளர் எஸ். எஸ். குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அரசியல் வாதியான  ஆனந்த சங்கரி அவர்களும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  உதயகுமார்  அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆகிய மூவரும் கலந்து கொண்டு  இணைந்து தலைமைச் செயலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

டான் ஊடகமானது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின்  பாரம்பரியங்கள், கலைகள், கலாச்சாரங்கள் என்பவற்றை கட்டியெழுப்பவும் மக்களின் கருத்துக்களை வெளியால் எடுத்துரைக்கவும், மக்களுக்கு உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் மேலும்  மக்களுக்கு தமது சேவையை வழங்கும் நோக்குடனும்  கிழக்கிலும் தடம் பதித்துள்ளது.

மேலும் இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கோல்ட் பனாண்டோ அவர்களும் , தமிழரசுக் கட்சி பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் அவர்களும்,  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோடிஸ்வரன், வியாழேந்திரன் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் சக்திவேல், பேராசிரியர் மெளனகுரு, மற்றும் கல்லடி பிரதேச இராணுவ அதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் போன்றோரும் மேலும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: