இதுவரை தமிழ் மக்களின் இணக்கம் இல்லாமலேயே அரசமைப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் இணக்கத் தயார். ஆனால் அதற்கான நிபந்தனை ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும். இதையே தெற்கில் சிங்களப் பகுதிகளில் சொல்லியிருக்கின்றேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
வடமராட்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வான்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது
நாடு தான் பிரிக்கப்பட முடியாது. ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் அதை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். ஆட்சி முறையைக் குறிக்கும் யுனிற்றரரி ஸ்ரேட் மற்றும் ஒன்றையாட்சி என்பன தவிர்க்கப்பட்டு, நாட்டின் ஒருமித்த சுபாவத்தைக் குறிக்கும் சொற்பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது.
ஏக்கிய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாததும், பிரிக்க முடியாததும், அரசமைப்புத் திருத்தங்களுக்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடமும், மக்களிடமும் விடப்பட்டிருக்கின்ற ஒரு நாடு என்ற வரைவிலக்கணத்தைக் கொண்டது. எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment