தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்தவாரம் இடம்பெறும் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உறுப்பினர்களை நியமிப்பதற்காக அரசியலமைப்புச் சபை எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதிகளில் கூடவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாணைக்குழுவுக்கு உறுப்பினர்களாக பலருடைய பெயர்கள் தற்பொழுது பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆணைக்குழு கடந்த 2015 ஒக்டோபர் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்காக நியமிக்கப்பட்ட இதன் உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதற்காக ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment