Thursday, October 25, 2018

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இனி கட்டாயமில்லை - கல்வி அமைச்சர்

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டே அமைச்சர் இதனைக் கூறினார்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த குழுவில் கல்வியாளர்கள், சிறுவர் உளவியலாளர்கள் மற்றும் சிறுவர் நோய் சம்பந்தமான விஷேட வைத்தியர்கள் அடங்கிய நிபுணர்கள் உள்ளடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: