Sunday, October 28, 2018

வரணி கரம்பைக்குறிச்சி பாடசாலையில் பரிசில் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

வரணி கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் (27) வருடாந்த பரிசில் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பாடசாலை முதல்வர் திரு க. இளங்கோவன் தலைமையில் பிற்பகல் 1.30 மணியளவில்  இந்நிகழ்வுகள்  ஆரம்பமாகியிருந்தன.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும், வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின்  ஆசிரிய கல்வியலாளருமாகிய திரு கு. நந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு ந. திருவாசகன் அவர்களும், பழைய மாணவரும் கிளி/முழங்காவில் மகாவித்தியாலய ஆசிரியருமான திரு க. அருளானந்தகுமார் அவர்களும், மற்றும் பழைய மாணவரும் மு/ அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியருமான திரு ம. மணிவண்ணன்  அவர்களும் அத்துடன்  கெளரவ விருந்தினர்களாக பழைய மாணவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற அபிவிருத்தி உத்தியோகத்தருமான திரு சு. ஸ்ரீகரன் அவர்களும், பழைய மாணவரும் கரவெட்டி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு சு. சுமன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திறமைச்சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் அண்மையில் செயற்படுவோம் மகிழ்வோம் கலப்பு அணியில் போட்டி போட்டு தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கெளரவிப்புக்களும் இடம்பெற்றிருந்தன.

இப்பரிசில் நாள் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: