வரணி மத்திய கல்லூரியில் இன்று (29) பரிசளிப்பு விழா நிகழ்வு சிறப்பான முறையில் பாடசாலை அதிபர் பரம்சோதி செல்வவிநாயகம் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்கொடி மற்றும் பாடசாலைக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து படசலைக்கீதம் இசைக்கப்பட்டது அதனை தொடர்ந்து மேற்கத்தைய இசைக்கருவிகள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் செயலாளர் தேசமானிய எம். ரி. எஸ் இராமச்சந்திரன் அவர்களும் கெளரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரன் அவர்களிடம் பாடசாலை அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தான் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் கேசவன் சயந்தன் அவர்களால் பாடசாலைக்கு தேவையான இலத்திரனியல் ரோனியோ இயந்திரத்திற்கு ரூபா 300.000 ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விருந்தினர்களுக்கு கெளரவித்து நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்ட்து.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் இசை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது ,அத்துடன் இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment