Thursday, September 27, 2018

கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை எந்நெருக்கடியிலும் குறைக்கப்படாது - பிரதமர்

நாட்டிற்குள் எதுவித பொருளாதார நெருக்கடிகளும் இருக்கலாம். ஆனால் கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் தொகையை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நிதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறே தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துள்ளன. இலங்கையில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

No comments: