Saturday, September 29, 2018

வந்தோரை வாழ வைக்கும் வரணியிலும் இவ்வாறானதொரு நிலைமையா?

பலதுறை சார் வளர்ச்சியிலும் முன்நோக்கிச்செல்லும்  வரணி பிரதேசத்தில் இயற்றாலைப்  பகுதியில் வசித்து வரும் ஐந்து குடும்பங்களின் நிலைமை மிகவும்  கவலையளிக்கின்றது.

மிகவும் வறுமை நிலையில் அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இருப்பதற்கு ஓர் ஒழுங்கான வீடு இன்றி தவிக்கின்றார்கள். குடிப்பதற்கும் குடிநீர் வசதியும் அவர்களுக்கு பிரச்சனையாகவே உள்ளது. மின்சார வசதி இல்லை. எவரதும் உதவியுமின்றி தாமே கூலி வேலை செய்தே அன்றாட வாழ்க்கையை வாழ்கின்றார்கள். இவர்கள் இவ்வாறானதொரு  இக்கட்டான நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.

மழை பெய்கின்ற வேளைகளில் மழை நீர் உட் புகுவதால் (ஒழுக்கு )  வீட்டில் இருக்க முடியாதுள்ளனர்.

இக்குடும்பத்தில் ஒருவர் வரணி  பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் அவர்களை சந்தித்து தமது நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன் மழை பெய்யும் வேளைகளில் தாம்  வீட்டில் இருக்கமுடியாது உள்ளோம் எனக்கூறியதும் அவ்விடத்திற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினர் அவர்களின் நிலைமைகளை  நேரில் பார்த்துள்ளார்.

அத்துடன் மழை வேளைகளில் வீட்டில் தற்காலிகமாக இருப்பதற்காக தனது இளைஞர் அணி வட்டத்தின் உதவியுடன் ஐந்து  குடும்பங்களிற்கும் உடனடியாக கூரைக்கு மேல் போடுவதற்காக தரப்பாள் வழங்கியுள்ளார்.

அத்துடன் அவர்களின் நிலையை மாற்றி அன்றாட  வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதேசசபை உறுப்பினருடன் இணைந்து  இளைஞர் அணியினரும் மற்றும் எமது வலைத்தளமும் தீர்மானித்துள்ளோம்.

மேலும் உதவிக்கரம் நீட்டும் மனம் படைத்த எமது ஈழத்து, புலம்பெயர் உறவுகளும் உதவி செய்ய முடியும். அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் எமது வலைத்தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐந்து குடும்பங்களின் தொடர்பை ஏற்படுத்தி தர தயாராகவுள்ளோம்.







No comments: