Monday, October 1, 2018

வரணி குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தின நிகழ்வுகள் வரணி மத்திய கல்லுரியில்.

வரணி குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (1) வரணி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றன. 

பி . ப 2.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் தென்மராட்சி திருமதி ச.அரியநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வரணி மத்திய கல்லூரி அதிபர், ப. செல்வவிநாயகம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர்கள், சி. பிரபாகரன் மற்றும் ஆ. சாந்தகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிறுவர்களின் இசை நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படடன. இக்கற்றல் உபகரணங்களுக்காக பிரதேசசபை உறுப்பினர்களான சி.பிரபாகரன், க. சதீஸ்வரன் ஆகியோரும்  இணைந்து நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

மேலும் இநிகழ்வில் முன்பள்ளி சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




No comments: