புலம்பெயர் சமுகத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எடுக்கப்படாத்தால் விபத்தா தாக்குதலா? என்று கூற முடியவில்லை.
இந்தச் சம்பவம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அண்மையில் இன்று முற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர்.
"வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு மூத்த ஊடகவியலாளரும் அரசாங்கஉத்தியோகத்தருமான இ.தயாபரன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த வாகனம் அவரை மோதிவிட்டுத் தப்பித்தது என்று சம்பவ இடத்தில் நின்றவர்களால் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் தலையில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.எனினும் மேலதிக சிகிச்சைக்காக ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்" என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.ஊடகவியலாளர் தயாபரன் ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியான தொடர்புகளை பேணி வரும் ஒருவர் எனவே இன்றைய இந்த சம்பவமானது வடக்கில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதியுடன் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த நல்லாட்சி வந்ததன்
பின்னர் தான் நாம் அமைதியாக தூங்க கூடியதாக உள்ள தெனவும் குறிப்பிட்டிருந்தார் அத்தோடு 2016ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் கலந்துகொண்டு நினைவுச் சுடர் ஏற்ற முற்படுகையில் நீங்கள்தானே விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என பாராளுமன்றத்தில் பேசினீர்களே இன்று ஏன் இங்கு வந்தீர்கள் எனவும் குரலெழுப்பியவரே
மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன், தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment