யாழ் தென்மராட்சி வரணி நாவற்காடு வாணி முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா நிகழ்வு இன்றைய தினம் (01) முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முன்பள்ளியின் முகாமைத்துவக்குழுத் தலைவி திருமதி தி. கம்சிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது பி.ப 2.30 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
இவ்விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கொத்தணி தலைவரும், கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவருமான திரு க. துரைசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் திரு சி. பிரபாகரன் அவர்களும், யா/ கரம்பை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திரு ச. அகிலன் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக நாவற்காடு கிராம உத்தியோகத்தர் திரு ம. அமலதீபன் அவர்களும், கல்வி உத்தியோகத்தர் திரு இ. மகாலிங்கம் அவர்களும், அத்துடன் பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க மேற்பார்வையாளர் திரு சி. ரதிக்குமார் அவர்களும் அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களான வியாஜகுமாரி பாஸ்கரன், தயாளன் கல்பனா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் மழலைகளின் விளையாட்டுக்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வும், பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது. தொடர்ந்து பாரிசில் வழங்கும் நிகழ்வுடன் விளையாட்டு விழா நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment