Wednesday, February 27, 2019

யாழ் வரணி தற்காப்பு வீரர்கள் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்!

சர்வதேச சொடோகான் கராத்தே சங்கத்தினால் (I.S.K.A) கராத்தே சுற்றுப் போட்டி கண்டி, டிகன உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23ம் திகதி  நடைபெற்றது.


இப்போட்டியில் பூட்டான், இந்தியா, துருக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.




 இந்நிகழ்வில் நீண்ட கால கராத்தே அனுபவம் வாய்ந்தவரும் சர்வதேசத்தில் 7ம் கறுப்புப் பட்டியும் (W.K.F) இலங்கையில் 8ம் கறுப்புப் பட்டியும்  (S.L.K.F) பெற்றவரும் அத்தோடு பல விருதுகளை வென்றவருமான சிகான்  மா. இரத்தினசோதி அவர்களின் மாணவன் சென்சி க. காமலேந்திரன் (கமல்)
அவர்களின்  வரணி கிளை தற்காப்புக் கலையக போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.



இதில் 7 வயது முதல் 32 வயது வரையான வரணி கிளை போட்டியாளர்கள் குறித்த கராத்தே சுற்றுப்  போட்டியில் பங்கு பற்றி 3 தங்கப்பதக்கங்கள் உட்பட 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.




இப்போட்டியில் வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கங்களை வென்ற வீரர்களுக்கும் இவர்களை வழி நடாத்திய சிகான் மா. இரத்தினசோதி அவர்களுக்கும்  எமது வலைத்தளம் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


No comments: