Monday, December 3, 2018

வரணியில் கல்வி கற்ற அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

வரணி மத்திய கல்லூரியில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் மிளிர்கின்ற அனைவருக்கும் பழைய மாணவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

வரணி மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்காக பழையமாணவர் சங்கம் சிறப்போடு செயற்பட்டு வரும் நிலையில் அதனை இன்னும் பலப்படுத்தி செயற்படுத்த கல்லூரியில் கற்ற மாணவர்கள்  அனைவரும் தமது உறுப்புரிமையினை உறுதிப்படுத்த வேண்டும்.

 அனைவரும் அங்கத்தவராக இணைந்து பாடசாலையின் வளர்ச்சியுடன் கூடிய வெற்றிப்பாதையில் ஒன்றினைந்து செல்வதற்காக கல்லூரியில் கல்வி கற்ற அனைத்து ஆண்கள், பெண்கள் அனைவருமே அங்கத்துவம் பெற்று கால ஓட்டத்துடன் சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிப்பாதையில் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் வரணி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வேண்டி நிற்கின்றனர்.

No comments: