Monday, November 26, 2018

புலனாய்வுத்தகவலால் வீட்டிற்குள் வைத்து ஒருவர் மாட்டினார்

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிருசுவில் பழைய வாய்க்கால் பகுதியில் கசிப்பின் முதலாம் தரமான ஸ்பிறிட் உடன் சந்தேக நபர் ஒருவர்  இன்று இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் வலய புலனாய்வு பிரிவினரான விஜிதரன் மற்றும் தினேஸ் ஆகியோரின் அதிரடி தகவல்களோடு கொடிகாமம் பொலிஸார் விரைந்து வீட்டிற்குள் வைத்து கசிப்பு காய்ச்சிக்கொண்டு இருந்த வேளை குறித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளதுடன் 54 போத்தல் ஸ்பிறிட் உட்பட கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இக்குறித்த குற்றச்செயல் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: