Tuesday, October 9, 2018

நவராத்திரி ஆரம்ப நாளில் வரணி கரம்பைக்குறிச்சி பாடசாலையில் சரஸ்வதி திருவுருவச்சிலை திரைநீக்கம்.

வரணி கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (09) சரஸ்வதி திருவுருவச்சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இந்நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.

பாடசாலை அதிபர் திரு. க. இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு. சுப்பிரமணியம் சுந்தரசிவம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவத்திரை சிவநாதன் அவர்களும் கெளரவ  விருந்தினர்களாக திருமதி. விக்னேஸ்வரி ராகுலன், திருமதி. வள்ளிப்பிள்ளை மகாலிங்கம், திருமதி. தீபா சந்திரகாந்தன், திரு. மகாலிங்கம் கார்த்தீபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

சரஸ்வதி திருவுருவச்சிலையானது அமரர்களான மாணிக்கம் மகாலிங்கம், மகாலிங்கம் விக்னேஸ்வரன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக வள்ளிப்பிள்ளை மகாலிங்கம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு சிறப்பு விருந்தினர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் பாடசாலை மண்டபத்திற்கு வர்ணம் பூசிய கி. பிரதாப், அ. சுவேதன் ஆகியோரை  முதன்மை விருந்தினர் கெளரவித்திருந்தார்.

நவராத்திரி ஆரம்பமான நாளான இன்று நவராத்திரியின் முக்கியத்துவம் பற்றிய விளக்கவுரையை முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





No comments: