வரணி மத்திய கல்லூரியில் இன்று 2018 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. பாடசாலை பிரதான மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது.
பாடசாலை உயர் தர மாணவர் மன்ற தலைவர் க.நிருஷன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி. செ. சந்திரசேகரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மருதங்கேணி பிரதேச செயலக புள்ளி விபர உத்தியோகத்தர் வ. ஜீவாகரன் அவர்களும் போஷகராக கல்லூரியின் முதல்வர் ப. செல்வவிநாயகம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மலர்மாலை அணிவித்தல் உட்பட பல்வேறு வகைகளில் கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்நிகழ்வானது பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் கோலாகலமாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment