இன்றைய தினம் (06) இல்லற வாழ்விலே இணைந்துள்ள தென்மராட்சி வரணியை சேர்ந்த ஞானவரதன் சத்தியா தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பள்ளி நண்பர்கள் அனைவரும் இணைந்து மணப்பரிசாக எமது இனத்தின் தேவையறிந்து வறுமையால் அவதிப்படுகின்ற மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர்.
தாயகத்திலே அன்றாட வாழ்வாதாரத்திற்காக அல்லல் படுகின்ற பலரில் ஓர் குடும்பமாக வவுனியா மாவட்டத்தின் நகர் பகுதியிலே மிகவும் வறுமையோடு வசித்து வருகின்ற ஒரு குடும்பத்தினருக்கு அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அடிப்படை வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கோடு சுயதொழில் ஊக்கிவிப்பிற்கான
உதவிதிட்டம் வாழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரணி மத்திய கல்லூரியில் நீண்டதூரம் நடந்து சென்று கல்வி கற்று வருகின்ற ஓர் மாணவனிற்கான பொருளாதார அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் இருவேறு அன்பளிப்புக்களும் தாயகத்திலே மிகவும் அர்ப்பணிப்போடும் உண்மைத்தன்மையோடும் பல சமூக நலப்பணிகளை செயலாற்றி வருகின்ற தொண்டு நிறுவனமான " அன்பேசிவம்" நிறுவனத்தினூடாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடானது மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டான மிகவும் வரவேற்கக்கூடிய விடயமாகும்.
பல்வேறு வேதனைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் அன்றாட வாழ்க்கைக்காக அல்லல் படுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை ஞானவரதன் சத்தியா தம்பதிகள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி எமது வலைத்தளம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments:
Post a Comment