தென்மராட்சி வரணி அருள்மிகு சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா இன்றைய தினம் (20) பொங்கல் விழாவுடன் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
பொங்கல் விழாவான 1ம் திருவிழாவிலிருந்து 12 ம் திருவிழா வரை காலைப்பூஜை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 8 மணிக்கு அபிஷேக சங்கற்பமும் காலை 10 மணிக்கு மூலஸ்தானப்பூஜையும் காலை 10.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் கண்ணகைத் தாய் மேள தாளங்களுடன் வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மதியம் 12 மணிக்கு இருப்பிடத்தை அடைவார்.
மாலை, மூலஸ்தானப்பூஜை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் கண்ணகை அம்பாள் வெளி வீதியுலா வலம் வந்து திருவருள் பாலித்து மாலை 6 மணிக்கு இருப்பிடத்தை அடைவார்.
15 திருவிழாக்களில் 12 சப்பைரதத் திருவிழாவும் 13 தேர்த்திருவிழாவும் 14 தீர்த்தத் திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளன. அத்துடன் 15 பட்டுத் தீர்த்தத்துடன் திருவிழாக்கள் அனைத்தும் நிறைவு பெறும்.

No comments:
Post a Comment