Friday, October 12, 2018

என்ரர்பிரைஸ் ஸ்ரீ லங்கா அரசாங்க சலுகைக் கடன் திட்டம் பற்றிய தெளிவூட்டல் வரணி நாவற்காட்டில் நடைபெற்றது.

வரணி நாவற்காடு பொது மண்டபத்தில் இன்று (12) எண்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா,  அரசாங்க வட்டிச்  சலுகைக் கடன் திட்டம்  பற்றிய தெளிவூட்டல்  நிகழ்ச்சித் திட்டம் காலை 9.30 தொடக்கம் 12.00 மணி வரை சிறப்பான முறையில் இடம் பெற்றது.enterprise sri lanka க்கான பட முடிவு

இக்கடன் திட்டமானது  மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி என்பவற்றின் ஊடாக மத்திய வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உற்பத்தி தொழிலுக்கான சொர்க்க புரியாக விளங்கும் இச்சலுகைக் கடன் திட்டம் பற்றிய தெளிவூட்டலை  பிரதேச சபை உறுப்பினர் சி. பிரபாகரன் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கொடிகாமம்  மக்கள் வங்கி அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தில் மக்கள் பலர் கலந்து கொண்டு தமது உற்பத்தி தொழிலுக்காக சலுகைக் கடன் பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளனர்.

மேலும் உற்பத்தி தொழிலுக்காக இத்திட்டத்தின் பயனைப் பெற விரும்பும் பயனாளர்கள்  மக்கள் வங்கிக்கு செல்வதன் மூலம் விரைவாக சலுகைகளை பெற்று பயன் பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












No comments: