யாழ்ப்பாணத்தில் உள்ள 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீதிப் போக்குவரத்து விதிகளை மீறிய 151 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று (14) மாலை சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் அடங்கலாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment