கச்சாய் பாலாவி பகுதியில் ஒரு குழுவாக மது அருந்திக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அதிலிருந்த ஒருவரால் 119 க்கு அழைப்பு எடுக்கப்பட்டது.
உடனே கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவ்விடத்திற்கு விரைந்து அக்குழுவிடம் விசாரணை மேற்கொண்டு இருந்த போது ஒருவர் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஒடியுள்ளார்.
அதிரடியாக செயற்பட்ட பொலிஸார் தமது வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.வாகனத்தை கொண்டு சென்ற இளைஞன் பொலிஸாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய இளைஞனை இனங்கண்ட பொலிஸார் அவைரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment